தேனி மாவட்ட புதிரை வண்ணார் இன மக்கள் கூறும் "புதிரை வண்ணார்" சாதிக்கான பெயர் காரணம். பல வருடங்களுக்கு முன் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் விரட்டி வந்துள்ளனர். அப்பொழுது அவர் அருகில் இருந்த ஒருவரிடம் புதர் போல் செடி அடர்திருந்த இடத்தை காட்டி நான் இந்த இடத்தில் ஒளிந்து கொள்கிறேன் போலீசார் கேட்டால் தெரியவில்லை என்று கூறிவிடுங்கள் என்று கூறி அதில் சென்று ஒளிந்து கொண்டார். ஆனால் போலீசார் வந்தவுடன் அருகில் இருந்தவர் போலீசாரிடம், நேரடியாக ஒளிந்திருந்த இடத்தை காட்டாமல் முள்ளும் புதரும் முள்ளும் புதரும் என்று மறைமுகமாக கூறி அவர் ஒளிந்திருந்த இடத்தை காட்டி பிடித்து கொடுத்துள்ளார். புதரில் சென்று ஒளிந்து மாட்டி கொண்டதால் அன்றிலிருந்து இவ்வினத்திர்க்கு "புதிரை வண்ணார்" என்று பெயர்வந்ததாக கூறுகின்றனர்.
No comments:
Post a Comment