புதிரை வண்ணார் என்ற பாதிராவு வண்ணார் தலித்.மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்புக்கூறு திட்டங்களை வடிவமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களை, அருட்தந்தை குமார் அவர்களோடு நேற்று காலை சந்தித்தேன்.
புதிரை வண்ணார் என்ற தலித் சாதியின் உண்மையான பெயர் பாதிராவு வண்ணார் என்று கிருஷ்ணன் விளக்கினார்.பாதி ராத்திரியில் மட்டும் நடமாட வேண்டும் என் விதிக்கப்பட்டவர்கள் எனவும் சொன்னார். கிராமங்களில் இவர்கள் ஏகாலி என்றும் அழைக்கப்பட்டனர், கழுதையின் நான்கு கால்கள்,அந்த தொழிலாளியின் இரண்டுகால்கள்,அவரது கைத்தடி ஆகியவற்றின் காரணப்பெயர்தான் ஏகாலி என குமார் விளக்கினார்.
அதை கேட்டதில் இருந்து எத்தகைய கொடூரமான சமூகத்தில் வாழ்கிறோம் எனற அதிர்ச்சியில் அதிர்ந்த மனமும் உடலும் இன்னமும் அடங்கவில்லை.
ஐந்து வயதில் ராமநாதபுரம் கடலாடி கிராமத்தில் எனது பாசத்துக்குரிய அய்யம்மா வின் வாயிலிருந்து அந்த ஏகாலியை கேட்டேன்.இத்தனை ஆண்டுகாலத்திற்கு பிறகு அர்த்தம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இறந்து போன பாசத்துக்குரியவர்கள் மீதும் கோபப்பட வைக்கும் சாதீயம். இந்திய பண்பாட்டின் புனிதத்தை மட்டும் பேசும் இந்துத்வா பயங்கரவாதிகளையும்,இந்திய சாதியத்தை கண்டுகொள்ளாமலே முற்போக்கு பேசுபவர்களையும்,என்ன செய்யலாம்? http://centre-niyayan.blogspot.com/
[தொகு]மனோவியல் மருத்துவர்
"புதிரை வண்ணார் எனப்படும் சாதியினர் இன்றளவும் பேய் விரட்டும் தொழிலை செய்துவருகின்றனர். தான் பேயினால்தான் தாக்குதலுக்குள்ளானேன் என்று நம்புவர்கள் பேய் விரட்டும் நிகழ்ச்சி செய்தவுடன் அந்நோயிலிருந்து குணமடைந்ததாக உணருகின்றனர். இது அறிவியலா அல்லது மூடநம்பிக்கையா என்பது இவ்விடத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பேய்விரட்டப்பட்டதால் நோய் ஒழிந்துவிட்டதாக உணருகின்ற காரணத்தினால் பேய்விரட்டும் புதிரை வண்ணார் இவ்விடத்தில் மனோவியல் மருத்துவராக செயல்படுவதைக் காணமுடிகிறது." [1]
No comments:
Post a Comment